முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தேனி மாவட்டம் கம்பத்தில் நகர காங்கிரஸ் சார்பில், காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு நகரத் தலைவர் போஸ் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், கவிஞர் பாரதன், காங்கிரஸ் தலைமைக் கழக பேச்சாளர் ஆர்சி சிவமணி உட்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.