• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியீடு

ByKalamegam Viswanathan

Oct 9, 2024

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் நாளை வெளியாகியுள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டனர்.

அவர் அரசியல் வேண்டாம் என்ற போது ஏற்றுக்கொண்டோம், அதைப்போல நடிப்பதை நிறுத்தினாலும் ஏற்றுக் கொள்வோம். மண்சோறு சாப்பிட்ட ரசிகர் பேட்டி..,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் உலகெங்கும் நாளை வெளியாக உள்ளது. மேலும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

இந்நிலையில் படம் வெற்றி பெறவும், ரஜினிகாந்த் உடல் நலத்துடன் வீடு திரும்பியதையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபாடு மேற்கொண்டனர். மேலும் படம் வெற்றி பெறுவதற்கு மண்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம் நகர செயலாளர் சரவணன் கூறுகையில்:

படம் வெற்றி பெறவும், உடல் நலத்துடன் தலைவர் வீடு திரும்பியதற்காக இந்த வெயிலுகந்த அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வேண்டியும் படம் நிச்சயம் ஜெயிலரை விட பெரிய வெற்றி அடையும்.

சினிமாவில் இருந்து ஓய்வறிப்பது குறித்த கேள்விக்கு:

நிச்சயம் ஏற்றுக் கொள்வோம் ஆண்டுக்கு ஒரு முறை அவர் வீட்டுக்கு சென்று அவரைப் பார்த்து விட்டு வருவோம். நிர்வாகிகள் குடும்பத்துடன் அவர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவர் அரசியல் வேண்டாம் என்ற போது ஏற்றுக்கொண்டோம், அதைப்போல நடிப்பதை நிறுத்தினாலும் ஏற்றுக் கொள்வோம் எங்களுக்கு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும். தலைவரைப் பார்த்து தான் நாங்கள் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டோம் என கூறினார்.