• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாமனிதன் படம் பார்த்து நெகிழ்ந்த ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்று மாமனிதன். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடித்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போகும் இந்த படம் வரும் மே மாதம் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் பார்த்து விட்டு நெகிழ்ந்து பாராட்டியுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், “ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி, நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார் நன்றி” என பதிவிட்டுள்ளார்.