சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது கூலி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் நாளை மறுநாள் 14 தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந் நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கூலி திரைப்படம் வெற்றியடைய இதனை கொண்டாடி வருகின்றனர்.
கூலி படம் வெற்றியடைய மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு கோயிலை சுற்றி உருண்டு கொடுத்து நேத்திக்கடன் செய்தனர்.
தொடர்ந்து கூலி படத்தை வரவேற்கும் விதமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை பொங்கல் அன்னதானமாக வழங்கினர்.