விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 ரயில்வே மேம்பாலங்களுக்கு முதற்கட்டமாக அதிமுக ஆட்சியில்தான் 67 கோடி ஒதுக்கப்பட்டதை செய்தித்தாளில் வந்ததை சுட்டிக்காட்டினார்.

பின்னர் உங்களால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,மாணிக்கம் தாகூர் எம்பி யால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை என்றார்.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கு விதை போட்டது அதிமுக தான் என தெரிவித்தார்.
அதிமுகவின் கடை கோடி தொண்டன் இருக்கும் வரை திமுகவின் ஏமாற்று நாடகம் எடுபடாது .

திமுக-வால் ஒரு பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா. டெல்லிக்கு செல்லவும் மாட்டார்கள்.
திமுக அரசு தென் மாவட்டங்களை வஞ்சிக்கிறது.தென் மாவட்ட மக்களுக்கு எந்த நிதியும் திமுக அரசு ஒதுக்குவது கிடையாது.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)