• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சர்வதேச யோகா போட்டியில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி சாதனை

BySeenu

Mar 27, 2024

சென்னையில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி ஒட்டு மொத்த சேம்பியன் மற்றும் கல்ச்சுரல் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தல்…

சென்னை வேலம்மாள். இண்டர் நேஷனல் பள்ளியில் (IYYF & SYYF) இணைந்து இண்டோ-ஸ்ரீலங்கா யோகா சேம்பியன்ஷிப் நடைபெற்றது..ஜூனியர், சீனியர் மற்றும் ஓபன் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த யோகா போட்டியில் போட்டியில் கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, பாண்டிச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும், ஸ்ரீவில்லிபுத்தூர். கம்மாப்பட்டியைச் சேர்ந்த மாணவி ஜெ.கு.ஜெயவர்தனி ஒட்டு மொத்த சேம்பியன் பிரிவிலும், கல்ச்சுரல் பிரிவிலும் முதலிடம் பெற்று கோப்பையை தட்டி சென்றார்…இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அண்ட் ஸ்ரீலங்கா சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வாகி உள்ள ஜெயவர்தினி மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான . யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். ஏற்கனவே பல்வேறு மாவட்ட, மாநில, சர்வதேச யோகா போட்டிகளில் வென்று சாதனை படைத்தவர் மாணவி ஜெயவர்தினி இந்த போட்டியிலும் வென்று சாதனை படைத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.