• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராஜபக்சே இந்தியாவில தஞ்சம் அடையவில்லை

ByA.Tamilselvan

May 11, 2022

இலங்கை பிரதமர் ராஜபக்சே இலங்கை வன்முறைக்கு பயந்து இந்தியாவில் தஞ்சமடைந்ததாகவந்த செய்திகளுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் பதவிவிலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்து நாடு முழுவமும் பற்றி எரிகிறது. இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக சூழல் காணப்படுகிறது, பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்தார்.பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதனையடுத்தே அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில்ஆத்திரமடைந்த மக்கள் ராஜபக்சே குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து வருகின்றனர்
தற்போது மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. இது குறித்து இந்திய தூதுதரகம் வெளியிட்டுள்ள தகவலில்இலங்கை தலைவர்கள் யாரும் இலங்கையில் தஞ்சம் அடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தன து ட்விட்டரில், “சில அரசியல் பிரமுகர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இவை அனைத்தும் போலியான மற்றும் தவறான தகவல்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவில் இலங்கை தலைவர்கள் தஞ்சம் என்பதைக் கடுமையாக மறுக்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.