• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரச்சாரத்தில் குதித்துள்ள ராஜலட்சுமி- செந்தில் தம்பதி?

திண்டுக்கல் பகுதியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சுயேச்சை வேட்பாளர் ஒருவரை ஆதரித்து பிரபல நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அத்துடன் சுயேட்சை வேட்பாளர்களும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வாக்காளர்களை கவரும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாவது வார்டு வேட்பாளர் சினிமா மற்றும் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதியை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் பாடல்கள் பாடி சந்தோஷ் முத்துவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.