• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் -மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடைகுளம் மற்றும் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மானாமதுரை உடைகுளம்,காட்டு உடைகுளம் ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்நிலையில் மானாமதுரை பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் உடைகுளம் பகுதியில் உள்ள நாடம்பி கண்மாய் முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்து சென்றதாலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொண்டதினால் மக்கள்அத்தியாவசிய பொருள்கள் கூட வாங்க வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்கு செல்ல கூட வாகனங்கள் உள்ளே வர முடியாத சூழ்நிலையில் கர்ப்பிணிகள் மற்றம் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.