மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர் அழகர் கோவில், திருமங்கலம், மேலூர், கள்ளிக்குடி, வரிச்சூர், கருப்பாயூரணி, பேரையூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலக்குண்டு, நிலக்
கோட்டை, அம்மைய நாயக்கனூர், திண்டுக்கல், சின்னாளப்பட்டி உள்ளிட்ட பலவுகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால், மதுரை நகரில் பல தெருக்கள் குளம் போல மாறின. மதுரை அண்ணா நகர் மருது பாண்டியர் தெரு, தாசில்தார் நகர் வீரபாண்டி தெரு, காதர் மொய் தீன் தெரு, சௌபாக்யா கோவில் தெரு வில் மழை நீர் குளம் போல தேங்கின்றன. மேலும், மதுரை தாசில் நகர், சித்தி விநாயகர் கோவில் தெருவில், மழை நீர் குளம் போல தேங்கி, போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.
பலத்த மழையால், இப்பகுதி உள்ள வர்த்தகர்கள் அவதி அடைந்தனர். மதுரை நகராட்சி ஆணையாளர், மேயர் ஆகியோர்கள் பார்வையிட்டு மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சித்தி விநாயக கோவில் தெரு, சௌபாக்யா கோவில் தெரு, மருதுபாண்டிய தெரு ஆகியவற்றை பார்வையிட்டு சாலைகளை துரிதமாக சீரமைக்க இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
