மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலிசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு சேரில் அமர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

எம்ஜீஆர், ஜெயலலிதா காலம் தொட்டு சிறப்பாக பணியாற்றி மக்களின் நம்பிக்கையை பெற்றவர் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி. இன்று அவரது உடல் நலிவுற்று இருக்கும் போதிலும் கழக பணியில் தீவிரமாக பங்கேற்று வந்தார்.
இன்று நடைபெறுகிற சோதனை கண்டனத்திற்குரியது, அரசியல் கால்புணர்ச்சியோடு அதிமுகவின் பணிகளை முடக்குவதாக தான் நாங்கள் கருதுகிறோம்.,
இது போன்ற சோதனைகளை சட்ட ரீதியாக ஏற்கனவே இது போன்ற அடக்குமுறையாலும், சோதனையாலும், கழக பணிகளை யாரும் முடக்கி விட முடியாது என தெளிவாக சொல்லியுள்ளார்., முழுக்க முழுக்க அரசியல் கால்புணர்ச்சியோடு சோதனை நடைபெறுகிறது, இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.,
லஞ்ச ஒழிப்புத்துறை என்ன அறிக்கை கொடுக்கிறார்கள் என பார்த்து அடுத்த கட்டமாக பொதுச் செயலாளரின் ஆலோசனை படி சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும்.
ஒரு புறம் மத்திய அமலாக்கதுறை ரைடு, சட்டமன்றம் நடைபெறுகிற போது இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது, நீதிமன்றத்தின் அழுத்தம், நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள், அதற்கு பின் தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இதிலிருந்து திசை திருப்புவதற்காக தான் ஆட்சி முடிகிற தருவாயில் இந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அமலாக்கத்துறையின் முறையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, இரண்டு முன்று முறை அழைத்தும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் தான் தொடர் சோதனை என புரிந்து கொள்ள முடிகிறது.
முழுக்க முழுக்க அரசியல் கால்புணர்ச்சியோடு, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்கும் பணிகளை 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம்.
இது போன்ற சோதனைகள் அதிமுகவின் பணிகளை தடுக்க முடியாது., சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.