

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
யாத்திரை செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. செப்டம்பர் 7 முதல் 10 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரை நடைபெறவிருக்கிறது. இந்த யாத்திரையை வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி யாத்திரையாக நடத்துவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரியில் துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை எம்.பி.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பாத யாத்திரைக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
