• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை – சீமான்

ByA.Tamilselvan

Sep 10, 2022

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ..மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என்றார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது…: முதல் அமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர் என்னவாக பாடுபடுகிறார். முதல் அமைச்சர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். 80 சதவீத பிரச்சனைகளை, தீர்த்து வைத்ததாக முதலமைச்சர் தெரிவித்து வரும் நிலையில், 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி. இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி, நடைபயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா? என்ன மாற்றம் வரப்போகிறது? காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். மோடியை எதிர்க்க ஆள் வேண்டும். அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.