• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.


இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகா சரத்குமாரும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றபின் உரையாற்றியராதிகா அதுசம்பந்தமாக கூறுகிறபோது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி, என்று கூறியுள்ளார்.