லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த படம் கைதி 2019ம் ஆண்டில் விஜய் நடித்து வெளியான பிகில் படம் வெளியான அன்று நேரடி போட்டியில் குறைவான திரையரங்குகளில்வெளியாகி 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்திய படம் கைதி அதையடுத்து கைதி இரண்டாம் பாகமும் உருவாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன இதனை தயாரிப்பாளரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருதரப்பும் உறுதிப்படுத்தியுள்ளனர் கைதி படத்தை தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது இந்தியில் அப்படத்தை
தர்மேந்திரா ஷர்மா என்பவர் இயக்கத்தில் தயாரிக்கின்றனர் அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கின்றார் போலா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் 2023 மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியில் தயாராகும் கைதி
