கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் பணிகளை கடந்த 06.08.2023 அன்று பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட், முகப்பு அலங்காரம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சிறப்பு ரயில் மூலம் கரூர் ரயில் நிலையம் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சேலம் கோட்ட மேலாளர் பன்னா லால் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அம்ரித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
