• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரிசி மூட்டைகளில் QR குறியீடு… அரசின் புதிய திட்டம்..

Byகாயத்ரி

Sep 1, 2022

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அரிசி மூட்டைகளில் QR குறியீடு பதிக்க அரசு திட்டம்.

தமிழகத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகள் அண்டை மாநிலங்களுக்கு சட்டம் விரோதமாக கடத்தப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை கிடங்குகளில் இருந்து விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகளை கியூஆர் கோர்ட் என்ற பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அரிசி முட்டைகளில் QR குறியீடு பாதிக்கப்படுவதன் மூலம் கடத்தல் காரர்கள் மீது வழக்கு தொடரவும் அரசுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளுக்கு மட்டுமே அரிசி கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக ஆலைகளில் இருந்து அரிசி முட்டைகள் வினியோகத்தை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிடத்தை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கருவிகளை பொருத்தமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார்.