விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது பத்தாம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தை சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த தொழிலதிபர் காமராஜர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நான்கு ரத விதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் கலந்து கொண்டனர் .

தேருக்கு பின்னால் கும்பிடு வழிபாட்டில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கீழே விழுந்து கும்பிட்டு வழிபாடு செய்து தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பாணக்கரம் குளிர்பானம் மோர் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் நவரத்தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை நாட்டாமைகள் கனி மணி பெரியசாமி சமுத்திரம் காளியப்பன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்