• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நாய்க்கு மாடலாக மாறிய புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா

நாய் சேகர்.இந்தப் படம் இன்று(13.01.2022) திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தில் நாய் போன்ற போஸ் கொடுக்கும் சதீஷை படத்தின் விளம்பரபோஸ்டர்களில் பார்க்க முடிகிறது.ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ள படம் நாய் சேகர். படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். காமெடி நடிகர் சதீஷ் கதை நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பவித்ரா லஷ்மி நடிக்கஅறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதை கதைக்களமாக்கியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படம்முழுவதுமாக காமெடியை மட்டுமே நம்பி படத்தை இயக்கியுள்ளதாகவும் இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய்க்கு மிர்ச்சி சிவா பின்னணி கொடுத்துள்ளார். படத்திற்கு அஜிஷ் இசையமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் நாய் போன்ற போசுடன் சதீஷ் காணப்படும் பாடல் ஒன்று சிறப்பான வரவேற்பைபெற்றது.
இந்த போஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புஷ்பா புகழ் ராஷ்மிகா மந்தனா, இந்த போசை கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாக்கை நீட்டி, கையை மடக்கி அவர் கொடுத்துள்ள இந்த போஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் இதற்காக சதீஷ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.