• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜூலை 1 முதல் புதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடக்கம்

Byவிஷா

May 7, 2024

வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதுச்சேரியில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதற்கு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது இதுவும் முன்னறிவிப்பின்றி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் நிறுத்தப்பட்டது.
உதான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் விமான சேவைகளை மீண்டும் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி 2017 ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவைகள் துவங்கப்பட்டன. இதனை அடுத்து வார இறுதி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களாக புதுச்சேரியில் இருந்து விமான சேவையை துவங்க திட்டமிட்டு இருந்த இண்டிகோ நிறுவனம், புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையை ஜூலை 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்காக ஜூன் மாதத்தில் டிக்கெட் புக்கிங் துவங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து ஏர் செபா நிறுவனம் திருப்பதி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கும் விமான சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.