• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Byகாயத்ரி

Aug 22, 2022

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த பத்தாம் தேதி தொடங்கிய சட்டசபை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மத்திய அரசு புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ரூ.10,700கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடியுள்ளது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரடியாக காணும் வகையில் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பர துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி முகநூல், ட்விட்டர் மற்றும் யூட்யூப் மூலம் நேரடியாக சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.