• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

Byவிஷா

Apr 17, 2024

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200ம் கொடுக்கின்றனர்.
நேர்மையாக நடைபெற வேண்டிய இந்த தேர்தலை இவர்கள் கொச்சைப் படுத்திவிட்டனர். பணம் கொடுத்து ஜெயிக்கும் நிலைமை இருப்பதால் இந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளேன்” எனக் கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.