• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி வெளியிடு

ByA.Tamilselvan

Jul 12, 2022

எம்பிஏ,எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி அண்ணாபல்கலைக்கழகம் தகவல்
வரும் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. அதன்படி, எம்சிஏ தேர்வு மே 14-ம் தேதியும், எம்பிஏ தேர்வு மே 15-ம் தேதியும் நடை பெற்றது.
2022-2023 ம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்று தொழில்நுட் கல்வி இயக்கம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.