• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தொடக்கக்கல்வி பட்டயதேர்வு கால அட்டவணை வெளியீடு

Byவிஷா

Mar 13, 2024

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு வருகின்ற ஜூன் இருபதாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 8 வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 9 வரையும் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணை பாடவாரியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் இணையதள பக்கத்திற்கு சென்று இதனை அறியலாம். மேலும் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது