மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தென்கால் கண்மாய் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பெய்த மழையால் கண்மாயில் நீரின் அளவு அதிகரித்ததையொட்டி பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தென் கால்கண்மாயிலிருந்து அவனியாபுரம் செல்லும் இந்த பாசன கால்வாய் நிலா நகர் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நிலா நகர் குடியிருப்பு பகுதிக்குள் இந்த நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் சிரமமாக இருப்பதாகவும், நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளதாகவும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதால் கல்விகுழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரவிசந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உடனடியாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டது.






; ?>)
; ?>)
; ?>)
