• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்..,

ByS. SRIDHAR

May 8, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தீர்மானம் ஒன்று மரணம் அடைந்த மக்கள் நல பணியாளர்களுக்கு இந்த செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1989 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காலமுறை ஊதியம் பணி நிரந்தரம் பல சலுகைகளை மீண்டும் வழங்கிடமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த செயற்குழு கூட்டத்தை கேட்டுள்ளனர்.

மக்கள் நல பணியாளர்களுக்கு 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சென்னை ஊரக வளர்ச்சி துறையின் இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்போர் போராட்டம் எதிர்வரும் 22 5 2025 வியாழக்கிழமை நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதில் மக்கள் நலப்பணிக்கு நடக்கும் கடைசி போராட்டம் என்பதால் அனைத்து மக்கள் நலப்பணியாளர் சங்கம் பாகுபாடு இன்றி ஒற்றுமையாக போராட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.