புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கிழக்கு வட்டம், சிருநாங்குப்பட்டி, கீழவிளாக்குடி, மேல விளாக்குடி ஆகிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் 1995இல் ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை 196 நபர்களுக்கு அப்போது வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ரகுபதி தலைமையில் வழங்கப்பட்டது. அப்போது பண வசதி இருந்தவர்கள் வீடு கட்டி குடி இருந்தார்கள். பணம் வசதி இல்லாமல் காலி இடமாக வைத்து பராமரித்து வந்தார்கள் சில நபர்கள். கொஞ்சம், கொஞ்சமாக வீடு கட்ட தொடங்கி கட்டி இருக்கும் போது கஜா புயல் வந்து 70க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பொதுமக்கள் பொருள், பணம் இழந்து சூழ்நிலையில் வீடு கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் 56 காலி மனை பட்டாவில் ஆடு, மாடு, கோழி வளர்த்து பராமரிப்பு செய்து வருகிறோம். அரசு அளித்த பட்டா பத்திரம் எங்களிடம் தான் இருக்கின்றது. மேலும், சில அதிகாரிகள் கைக்கூட்டி பணம் வாங்கிக் கொண்டு வேறொரு நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து உள்ளார்கள். அவர்கள் எங்களிடம் நாங்கள் இரண்டு மூன்று லட்ச ரூபாய் கொடுத்துள்ளோம். இனிமேல் இந்த இடம் எங்களுடன் தான் என்று வாக்குவாதம் செய்து வருகிறார்கள். நாங்கள் அனைத்து அதிகாரியும் சந்தித்து மனு அளித்து கூறியுள்ளோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை எங்கள் இடத்தை உரிமை கொண்டாடும் வரும் நபர்கள் சத்தியமங்கலம் அண்ண வாசல் என பிற தாலுகாவில் இருந்து வருகை தந்து எங்கள் இடத்தை அபகரிப்பு வருவது வேதனை. அதனால் எங்கள் ஆதி திராவிட பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். எங்கள் இடத்தை மாவட்ட ஆட்சியர் மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும் என ஊர் பொதுமக்கள் எச்சரித்தனர்.