திண்டுக்கல் அருகே தொலைவில் உள்ள ரேஷன் கடையை அருகில் அமைக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாணார்பட்டி மாவட்ட குழு உறுப்பினர் பாப்பாத்தி மற்றும் கோபால்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கூறியதாவது.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் காரர்கள் உள்ளனர். ரேஷன் கடை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாகவும் உள்ளது .
வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே நத்தம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இடம் ஒதுக்கி புதிய ரேஷன் கடை கட்டித்தர கோரி மனு அளித்தனர்.