விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
அதன் அடிப்படையில் அனுமதி அளித்துள்ள இடத்தில் மண் அள்ளுவதற்காக பொக்கலைன், டிப்பர் லாரிகளோடு மண் அள்ளிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததால் கொட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். டிப்பர் லாரிகள் செல்ல முடியாமல் பொதுமக்கள் எதிர்ப்பு
தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென மண் ஏற்றிய லாரி நகர்த்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இது அர்ச்சுனன் (வயது 40) ,பஞ்சு (வயது 50) மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் அர்ஜுனன், பஞ்சு, ஆகியோர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கிராம மக்கள் கடந்தாண்டு கிராவல் மண் அள்ள அனுமதி அளித்த போது கண்மாய்க்கு மழை நீர் வரவில்லை இதனால் கண்மாய் வறண்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கண்மாய்களில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. கண்மாய்க்கு வர வேண்டிய மழை நீர் வருவதில்லை.
இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மீண்டும் அதே பகுதியில் கிராவல் அள்ளப்படுவதால் கண்மாய்க்கு வரவேண்டிய சிறிது அளவு தண்ணீர் கூட வருவதற்கு வாய்ப்பு இல்லை ஆகையால் கிராவல் மண் எடுக்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர். காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர் .இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.