• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இரண்டு அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானவிளக்கப் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை தெற்குமாவட்ட தி.மு.க சார்பாக ஆலங்குடி காந்தி பூங்காவில்
இந்தி திணிப்பு, எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி
வரவேற்புரையாற்றினார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை தாங்கினார்.
சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் சிவ.வீ.மெய்யநான் முன்னிலை வகித்தார்.

தி.மு.கழக செய்திதொடர்பு துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ராஜீவ்காந்தி, தலைமைக்கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு இந்தி திணிப்பு
தொடர்பான விளக்க உறையாற்றினார்கள். இக்கூட்டத்தில் திருவரங்குளம் தெற்கு
ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, வடக்குமாவட்ட
துணைசெயலாளர் ஞான.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். விழா முடிவில்
ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் நன்றி தெறிவித்தார். ஆலங்குடி தொகுக்கு
உட்பட்ட நகர மற்றும் கிராமப் புரங்களில் இருந்து ஏராளமான தி;.மு.க
தொண்டர்கள் கலந்துகொண்டனர்;.