மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் முள்ளிப்பள்ளம் பகுதிகளில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர்மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தானின் பேட்டை முதலியார் கோட்டை சங்கங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும் அதிக அளவு தூசி கலந்து குடிநீரை குடிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் இதுகுறித்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். முள்ளி பள்ளம் ஊராட்சியில் உள்ள தேநீர் கடையில் பாட்டிலில் குடிநீரை பிடித்து வைத்துள்ளனர் இந்த குடிநீரானது பெட்ரோல் நிறத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் குடிநீரை கிண்ணத்தில் ஊற்றினால் முழுவதும் தூசி படர்ந்து மங்கலாக காணப்படுவதாகவும் குடிநீரை பயன்படுத்தம் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இதனால் பலர் சோழவந்தான் மருத்துவமனைக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கும் வயிற்றுப்போக்கு காரணமாக சென்றிருப்பதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவதற்கான காரணத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளி ப்பள்ளம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது காண்பிப்பதற்காக குடிநீரை பாட்டிலில் பிடித்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நேரத்தில் சுகாதாரமற்ற குடிநீரால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)