• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்

ByN.Ravi

Aug 15, 2024

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில (13.08.2024) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி மற்றும் வரி திருத்தம் காலிமனை வரி விதிப்பு வேண்டி 38 மனுக்களும், சாலைவசதி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வேண்டி 36 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி 2 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 3 மனுக்களும், இதர கோரிக்கைகைள் வேண்டி 4 மனுக்களும் என மொத்தம் 83 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து மேயர் , நேரடியாக பெறப்பட்டது. இன்று நடைபெற்ற முகாமில், வீட்டு கதவு எண் மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பம் அளித்த மனுதாரருக்கு வீட்டு கதவு எண் உடனடியாக மாற்றம் செய்து அதற்கான அனுமதி ஆணையினை , மேயர் வழங்கினார்கள்.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் கோபு, செயற் பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற் பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சிவகுமார், கண்காணிப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.