• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

ByJeisriRam

May 16, 2024

எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டி ஊராட்சியில் எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரண்டு மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சீலையம்பட்டி கிராமத்தில் மெயின் ரோட்டில் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் வழங்க டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் கம்பங்களும் முற்றிலும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

எனவே உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பே டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருக்கின்றனர்.