மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நிலையில் இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருகில் எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கும் ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பட்டி பேருந்து நிலையம் அருகே அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் திடீரென எந்த ஒரு காரணமும் இல்லாமல் மூடப்பட்டது இந்த அம்மா மினி கிளினிக் மூலம் இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உதவிகளை பெற்று வந்தனர்
ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த மினி கிளினிக் மூடப்பட்டதாக இந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அதற்கு மாற்றாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையோ இந்த பகுதியில் அமைக்க அரசு முன்வராத நிலையில் கருப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரும்பாடி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் நாச்சிகுளம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் என இந்த மூன்று ஊராட்சிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் அடிப்படை மருத்துவ உதவிகளுக்காக சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட அருகில் உள்ள நகர்பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு கிராமத்திற்கும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அரசு கூறிவரும் நிலையில்

விபத்து நடக்கும் நிலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் இந்த பகுதி பொதுமக்கள் உள்ளனர். மேலும் இந்த மூன்று ஊராட்சிகளிலும் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடுகிறது பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாராமலும் உள்ளனர். இதன் காரணமாக தொற்றுநோய் பரவி அதிக அளவில் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தினசரி பல கிலோமீட்டர் செல்லக்கூடிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

ஆகையால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் ஊராட்சி பகுதிகளில் அரசு மருத்துவமனை அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



