ஊராட்சிக்கு சொந்தமான கோயிலா இல்லை. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலா எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் எப்படி ஊராட்சி வசூல் செய்ய முடியும். கோயில் என்று பார்த்தால் இந்து அறநிலையத்துறை மட்டுமே வசூல் செய்ய முடியும் ஆனால் ஊராட்சி நிர்வாகம் எப்படி வசூல் செய்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட S மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள வைகை ஆற்று அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஊராட்சி சார்பாக வாகன நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு யார் ஒப்பந்ததாரர் ஒவ்வொரு ரசிதிலும் வேறு வேறு பெயர் உள்ளது உண்மையில் ஒப்பந்ததாரர் உள்ளாரா அல்லது ஊராட்சி .ஒன்றிய அதிகாரிகளே வசூல் செய்கிறார்களா?
அதிகாரிகள் உடன் இருப்பதால்தான் பொது மக்களிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாவட்டத்திலேயே ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.