• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பப்ஜி, ஃப்ரிபயர் ஆன்லைன் கேம் வன்முறையை தூண்டுகிறது..

Byகாயத்ரி

Sep 27, 2022

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பப்ஜி, ஃப்ரிபயர் பாக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சிறுவர்களுக்கும் குழந்தைகளும் புரிவதில்லை. இந்த நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை Free fire விளையாட்டு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறுத்து நீதிபதிகள் கூறியுள்ளதாவது: பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒருவருக்கொருவர் இந்த கேம் விளையாட்டினால் பேசிக் கொள்வதில்லை. ஃப்ரீ பயர் விளையாட்டில் உள்ள ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.