• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நக்சல் ஒழிப்பு பிரிவு குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கல்

தேனி மாவட்டத்தில் நக்சல் ஒழிப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தவர், குமார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சமீபத்தில் உயிர் நீத்தார். அவரது குடும்பத்தாருக்கு 2009ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து திரட்டிய 26.25 லட்சம் ரூபாயை நிதி உதவியாக வழங்கினர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், காவலர்களின் இந்த சிறிய உதவி குமார் மகன் நிரஞ்சன் (6) படிப்புச் செலவிற்காக 20 லட்சம் ரூபாய் நிரந்தர இருப்புத் தொகையாக வைக்கப்பட்டது.

மீதமுள்ள 6.25 லட்சம் ரூபாய் ரொக்கமாக அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது. பண உதவி அளித்த ஒட்டு காவலர்களுக்கு, குமாரின் குடும்பத்தார்கள் மனதார பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.