• Fri. Apr 26th, 2024

குடிநீர் ஆதாரத்தை மீட்டுத்தர வேண்டி அம்மாபட்டி கிராம மக்கள் மனு!

Byகுமார்

Mar 7, 2022

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அம்மாபட்டி கிராமத்தைச் சார்ந்த ஊர் பொதுமக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்தை மீட்டுத் தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
தங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்கென ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. மேற்படி குடிநீர் தொட்டி மூலமாக எங்கள் ஊர் மக்கள் குடிநீருக்கு உபயோகிப்பதாகவும் மேலும் வைகை குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரை ஏற்றி குடிநீருக்காக பயன்படுத்தி வருகிறோம். இதற்கிடையில் அருகிலுள்ள சாலிசந்தை பஞ்சாயத்து கிராமத்தை சேர்ந்த செல்வம் சீதா லட்சுமி என்பவர் அம்மாபட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட தங்கள் குடிநீரை மீன் பண்ணைக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் தேவை என்பதால் தங்கள் பஞ்சாயத்துத் தலைவருடன் பேசி தண்ணீர் வாங்க ஏற்பாடு செய்துள்ளார். பஞ்சாயத்து தலைவரும் அவர்களுக்கு சாதகமாகவும், மேற்படி சீதாலட்சுமி தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து இலவச மின் இணைப்பும் பெற்றுள்ளார். மேலும் செல்வம் என்பவர் சி ஆர் பி யில் பணிபுரிவதால் தங்களையும் ஊர் பொது மக்களையும் மிரட்டி வருகிறார். மேலும்
தங்கள் பகுதியிலே நிலத்தடி நீர் என்பது பற்றாக்குறையாக உள்ளது இந்த நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றும் ராணுவ வீரர் அதிகார துஷ்பிரயோகம் செய்து காவல் துறையினரையும் பிடிஓ அதிகாரிகளும் வைத்து மிரட்டி வருகிறார்கள். மேலும் சாலிசந்தை கிராமத்தில் தான் எங்களது குழந்தைகள் பள்ளி பயின்று வருகின்றனர் அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கொலை மிரட்டல் விடுவதாகவும் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை. மேலும் நான்காவது முறையாக மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலிலும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம் என்று எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *