விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றதொகுதி அருகே கலங்காப்பேரி புதூர் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் விவசாய தொழில் செய்யும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

300 வருடங்களுக்கு முன்னதாக இவர்கள் குடியிருக்கும் நிலத்தை தானமாக வழங்கிய சிதம்பரம் மூப்பனார் என்பவர், கடந்த 1924 ஆம் ஆண்டு நிலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அப்போது பொதுமக்களை வெளியேற்றக் கூடாது என கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் குத்தகை பணத்தை கோயிலுக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊரில் உள்ள 62 வீடுகள் அமைந்துள்ள 1.52 ஏக்கர் நிலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானது என்பதால், ஆக்கிரமத்தை அகற்றி நிலத்தை கோயிலுக்கு வழங்க வலியுறுத்தி 10 தினங்களுக்கு முன் கோயில் நிர்வாகத்தினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலங்காதேவிபுதூர் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தார். பின்பு கிராம மக்களிடம் உங்களது கோரிக்கை நிறைவேற நான் துணை நிற்பேன் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,
பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வரும் தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்றுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கிடையாது.

இந்த பகுதி மக்களை தமிழக அரசு அகற்ற முயற்சி செய்தால் அதிமுக மக்கள் பக்கம் நிற்கும் எனவும், திமுக அரசை கண்டித்து எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் எனவும் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார் .











; ?>)
; ?>)
; ?>)