• Fri. May 3rd, 2024

நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், விஜயதரணி யார் அவர் என கேள்வி.

தமிழகத்தில் குமரி மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களின் பொறுப்பாளரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே.சிங் , குமரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் நிலைப் பாடு மற்றும் தேர்தல் வியூகம் ஆலோசனை கூட்டங்களில் நேற்று (மார்ச்_1)ம் தேதி கன்னியாகுமரியிலும், இன்று தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் நாடாளுமன்ற பொறுப்பாளர் வி.கே. சிங் கட்சியின் முக்கிய பல்வேறு பிரிவின் பொருப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக பாஜக தேர்தல் குழுவில் பொன். இரதாகிருஷ்ணனும் ஒரு உறுப்பினர் என்ற நிலையில். தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் பொன்னாருக்கும ஒரு தனித்த முக்கியத்துவம் இருக்கும் நிலையில், கன்னியாகுமரி மக்களவை வேட்பாளராக பொன். இராதாகிருஷ்ணன் 10 வந்து முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு. மத்திய பாஜக உயர் மட்டம் தான் கருத்து தெரிவிக்க முடியும் என்றவர்.

குமரி மாவட்டம்,தமிழகம் முழுவதும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் மழை பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு, ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து விட்டு போய் இரண்டு மாதங்கள் கடந்த பின்னும் ஒன்றிய அரசு நிவாரணம் வழங்குவதில் பாரா முகமாக இருப்பது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, தமிழக அரசு அதற்கான முறையான சான்றுகளை முழுமையாக அனுப்பிய பின் தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். நிதி அமைச்சர் அவர் மட்டுமே முடிவு எடுத்து செயல் படுத்த முடியாது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 71_வது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா எல்லாம் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.ஆனால் தமிழக பாஜகவினர் சீன மொழியில். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ”எக்ஸ்” சமூக வலைதளத்தில் சீனாவின் “மாண்டரின்” மொழியில் தமிழக பாஜக வெளியிட்ட பதிவில்”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினினுக்கு பிறந்த நாள் தெரிவித்துள்ள பற்றிய கேள்விக்கு அத்தகைய செயல்பாடு பற்றி தனக்கு தெரியாது என தெரிவித்த மத்திய அமைச்சர் வி.கே. சிங்யிடம். அண்மையில் பாஜகவிற்கு தாவிய விஜயதரணி பற்றி கேட்டபோது. அமைச்சர் செய்தியாளர்களிடம் யார் விஜயதரணி என கேட்டார்.

இந்திய இளைஞர்கள் சிறிய கடை மற்றும் பல்வேறு சுய தொழில்கள் செய்ய முன் வரவேண்டும் அரசு வேலை வாய்ப்பை மட்டுமே நம்பி இருக்க கூடாது என தெரிவித்த மத்திய அமைச்சர். கன்னியாகுமரியில் நீண்ட காலமாகவே விமான தளம், மற்றும் நிலையத்திற்கு இடம் தேடி வருகிறோம். உரிய இடம் கிடைத்ததும், கன்னியாகுமயில் விமான நிலையம் சம்பந்தப்பட்ட பணிகள் தொடங்கும் என்றவரிடம், நாடாளுமன்றத் தேர்தலில் அ தி மு க., மீண்டும் உங்கள் அணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, தி மு க ., உடனும் முன்பு பாஜக கூட்டணி அமைந்திருந்தது,அ தி மு க வுடனும் கூட்டணி அமைத்திருந்தோம். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *