• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கரூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ByJawahar

Jan 19, 2023

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவுப்படி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோதபோக்கு கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற கோரியும் கரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து கவர்னருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மெய்ஞ்ஞான மூர்த்தி, நகரத் தலைவர் வெங்கடேஷ், முன்னாள் நகர தலைவர் சுப்பன், நிர்வாகிகள் சின்னையன், முனீஸ்வரன், கோகலே மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடவூர் வட்டாரத் தலைவர் குமார் நன்றி உரையாற்றினார்.