

மணிப்பூர் கலவரத்தை தடுக்கக் கோரி, மதுரை யானை மலை மீது பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத் தலைவர் வீர அலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் 100 பேர் திடீரென மலையின் உச்சிக்குச் சென்றனர். அவர்களிடம் ஒத்தக்கடை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே அழைத்து வந்தனர்.
