தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம், மேல்நிலை முதல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒன்றிணைத்து போட்டோ ஜியோ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கீதா தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் ராஜகோபாலன் சந்தோஷ் குமார் மாநில துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் முருகேசன், ஆசைத்தம்பி மதியழகன் ரீட்டா மேரி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் க பாலகிருஷ்ணன் மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த கால தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தின் படி அதை செயல்படுத்தியும் ஊதியம் வழங்கவும் வேண்டும் ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாதம் நிலுவைத் தொகை இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும் தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்பி தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் பணி புரியும் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்தம்சக் கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இதை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் தேர்தல் காலத்தில் திமுக அரசுக்கு எதிராக செயல்படுவோம் என்பதையும் முழக்கமிட்டனர்.




