• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

20 ஆண்டுகளாக நில அளவு ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து குடியேறும் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 1, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் 114 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க கடந்த 2007ம் ஆண்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில்,

இது நாள் வரை பயனாளிகளுக்கு இடம் அளந்து, பட்டா வழங்காமலும் இழுத்தடித்து வந்ததாகவும், அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை பயனாளிகளுக்கு இடம் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி,

இன்று ஊர்மந்தை திடலில் கூடிய பொது மக்கள் அதிகாரிகள் இலவச வீட்டு மனை, பட்டா வழங்கும் வரை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை வடக்கு மாவட்ட வட்டாட்சியர் கமலேஸ் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்,

மேலும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்,

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.