• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்..,

ByKalamegam Viswanathan

Oct 1, 2026

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேனூர் கிராமத்தில் முக்கிய ரத வீதி வழியாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் முளைப்பாரியுடன் அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் அனைவரும் ஒற்றுமையோடு வாழ்வும் ஆண்டுதோறும் இந்த திருவிழாவை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தாண்டும் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது வழி நெடுகிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேர்த்திக்கடனாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பெண்கள் எடுத்து வந்த முளைப்பாரி அம்மன் வடிவத்திலும், கருப்புசாமி வடிவத்திலும் வந்த முளைப்பாரி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது முளைப்பாரி ஊர்வலம் தேனூர் கிராமத்தின் முக்கியரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.