திண்டுக்கல்லில்குடகனாறு அணை குறித்து ஆய்வு நடத்திய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்லக் கூடிய ராஜ வாய்க்காலை முறை கேடாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்றது.

இந்த தொகுதி அமைச்சர் தனது சொந்த நிலம் பயன்பாட்டிற்காகவும, தனது செண்ட் பேக்ட்ரிக்கும், அவரது உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் பிரித்து கொடுக்கப் படுகின்றது. அவர்களுக்கு ஏற்கனவே வைகை அணை செல்கின்றது. விவசாயிகளுக்கு முறையாக நீர் ஆதாரம் செல்லவில்லை என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன்.5,6 மாதங்கள் கழித்து திமுக கட்சி வரபோவதில்லை. நமது ஆட்சி தான். இதற்கு தீர்வு காணப்படும். திண்டுக்கல் மாவட்டம் கரூர் மாவட்டத்தில் 12000 ஏக்கர் நிலங்கள் இந்த நீரில் பாசனம் செய்து பின்னர் அமராவதி ஆற்றில் இந்த குடகனாறு அணை கலக்கிறது.
இந்த ராஜ வாய்க்காலை அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகின்றனர்.ஆத்தூர் காமராஜர் அணையை தூர்வார வேண்டும் 25 அடி ஆழமாக உள்ள அணை தற்போது 10 அடியாக உள்ளது. இது ஒரு சாதாரண பிரச்சனை. இந்தப் பகுதி அமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் விடுகின்றேன். இல்லையென்றால் நானே நேரடியாக வந்து போராட்டம் நடத்துவேன் என தெரிவித்தார்.இந்த பிரச்சனை குறித்து வல்லுனர் குழு அமைத்து இதுவரை தீர்வு காணப்படவில்லை ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரையும் அறிக்கை வெளியிடப் படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.