கட்டடம் கட்ட இன்றியமையாத பொருட்களாக விளங்கக்கூடிய M.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் கடந்த விலையேற்றப்பட்டுள்ளது. அரசு 4 மாதத்தில் நான்கு முறை குவாரிகளை நிறுத்திய பிறகு கட்டுமானத்திற்கு மிகமுக்கியமான பொருளாக M.சாண்ட் உள்ளது. யூனிட் கொண்ட M.சாண்ட் லோடு ஒன்றிற்கு ரூ.15,000/-த்திலிருந்து 21,000/-மாக விலையேற்றப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கட்டுமானத்துறை சார்ந்தவர்களின் போரட்டங்களால் கண்துடைப்பிற்காக லோடுக்கு ரூ.1,000/- விலை குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல செங்கல், சிமிண்ட், கம்பி போன்ற பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. வீடு மற்றும் கட்டடம் கட்ட அரசு அனுமதி பெறும் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு தனி நபர் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்கி வங்கி கடனுக்கு செல்வார்கள். ஆனால் இப்போது வரைபட அனுமதி வாங்கவே வங்கி கடனுக்கு செல்ல. வேண்டிய குழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு கட்டுவோருக்கு அதிக பாதிப்பும் கட்டட பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளார்கள் அனைவரும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும வகையில் கட்டுமான பொருட்களை விலையை குறைக்கவும் மற்றும் கட்டட அனுமதி கட்டணங்களை குறைக்கவும் மதுரை மாவட்ட கட்டட பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொறி அறிவழகள், பொறி வெற்றிக்குமரன், பொறி சஞ்சய், பொறி.சிவக்குமார் ஒருங்கிணைப்பாளர்களாகவும் மதுரை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர்பொறி பொன் இரவிச்சந்திரன்(AMCE), பொறி தண்டபானி(ACEM), திருமங்கலம் பொறியாளர் சங்கத்தலைவர் செந்தில்குமார், உசிலம்பட்டி பொறியாளர் சங்கத்தலைவர் லெனின், மதுரை கிரடாய் தலைவா முத்துவிஜயன், BAI தலைவர் ரெங்கராஜ் ஆகியோர் தலைமையில் அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர்களுடன் கலந்துகொண்டனர்.