• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனுமதி பெற்று ஜனநாயக ரீதியில் போராட்டம்..,

BySeenu

Nov 11, 2025

கோவைபுதூர் விளையாட்டு மைதானத்தில் கட்டிடங்கள் கட்ட தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதை கண்டித்து.கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் அதிமுக, பாஜக, மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்பாட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றிற்க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவைபுதூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, முதியோர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், உடற்பயிற்சி மேற்கொள்வதற்க்கும், விளையாட்டு பயிற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த விளையாட்டு மைதானத்தை, பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இனையதளத்தில் நாளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதாக அறிவிப்பானையை திமுக அரசு விடுத்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக, பாஜக மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவின் சதியை முறியடித்து, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மைதானத்தை மீட்கும்வரை போராட்டம் ஓயாது என்று திமுகவிற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திமுக இதனை அடுத்து போலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றிற்க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டதுடன் அனுமதிபெற்று ஜனநாயக ரீதியில் போராடுபவர்களை கைது செய்ததற்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.