இன்று மேலூரில் தமிழர் மக்கள் இயக்கத்தின் சார்பாக சூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கம்பூர் க.செல்வராஜ் மீது பொய்யாக புனையப்பட்டுள்ள தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய்யான வழக்கை ரத்து செய்யக்கோரியும், உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசையும்
மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரங்க குணசேகரன் தலைவர் தமிழக மக்கள் புரட்சி கழகம் தலைமை வைத்தார். தமிழர் மக்கள் இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் கேசம்பட்டி சி.ஜீவா நோக்க உரையாற்றி ஒருங்கிணைத்தார்.
சி.சூர்யா தலைமைக்குழு உறுப்பினர் தமிழர் மக்கள் இயக்கம்,செ.கர்ணன்
ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ,இமயம் சரவணன்
பொதுச்செயலாளர் தமிழர் முன்னணி,இராசு மதுரை மாநகர செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம், மணிக்குமார் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி, இராவண குமார் தமிழ்த்தேசிய உணர்வாளர்,அருணா மகளிர் ஆயம் அமுதா,மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மக்கள் பாதை பேரியக்கம், நிவேதா மாநில செயலாளர் தமிழ்நாடு பெண்கள் சங்கம் ,மின்னல் வரதன் ஒன்று சேர் அறக்கட்டளை,ஹக்கீம் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை,மு.க. வையவன் தலைவர் தமிழர் தேசிய கழகம்,பாரி தமிழ்த்தேச இறையாண்மை, நிலவழகன் தமிழக மக்கள் முன்னணி, அயூப்கான் மாவட்ட தலைவர் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மகாலட்சுமி பெண்கள் எழுச்சி இயக்கம்,

அரிட்டாபட்டி விமலா,அண்ணாதுரை மக்கள் சட்ட உரிமை இயக்கம்,ஜோயல் சமூக விழிகள்,விடுதலை குமரன் பொதுச்செயலாளர் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி,மாரிப்பாண்டி தன்னாட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
தமிழர் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பெருமாள், பார்த்திபன், கல்லானை சுந்தரம்,செல்வம், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர் பங்கேற்றார்கள். தமிழர் மக்கள் இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன் நன்றி கூறி நிறைவுரையாற்றினார்.








