100 நாள் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட மாற்றுத்திறனாளிகள் புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய ஏழை, எளிய கிராமப்புற மக்களையும், மாற்றுத்திறனாளிகளையும் வஞ்சித்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் ஒரு அதிகார சூறையாடல் என மாற்றுத்திறனாளிகள் கண்டனம் தெரிவித்தனர்.




